10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்வு கட்டுப்பாட்டு அறை திறப்பு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டிருப்பதாவது:-12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை)
முதலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 15-ந்தேதி முதலும் நடைபெற
உள்ளன.
தேர்வுகள் குறித்து மாணவர்கள், தேர்வு எழுதுபவர்கள், பொதுமக்கள்
தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற
வசதியாக அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வு கட்டுப்பாட்டு அறை
அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்வு காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். எனவே 8012594114, 8012594124, 8012594125, 8012594126 ஆகிய தேர்வு கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment