10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்
14/03/2016
தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும், 15ம் தேதி முதல்
துவங்குகிறது. தமிழகம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட சிறைவாசிகள், 10ம்
வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து, ஒன்பது பேர், பெண்கள் சிறையில்
இருந்து, எட்டு பேர் என, 17 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு,
சென்னை, புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக, வேலுார் சிறையில் இருந்து, 17 சிறைவாசிகள், நேற்று புழல்
சிறைக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். தேர்வு
முடியும் வரை அவர்கள் புழல் சிறையில் இருப்பர். தேர்வு முடிந்த பின்,
மீண்டும் வேலுார் சிறையில் அடைக்கப்படுவர் என, சிறைத்துறை அதிகாரிகள்
கூறினர்.
0 comments:
Post a Comment