உங்கள் குடலில் பிரச்சனை: வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள் இதுதான்


உணவை ஆற்றலாக மாற்றவும், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் என பல முக்கிய பணிகளைச் குடல் செய்கிறது. மேலும் இவை உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு முக்கியமானது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குடலில் பிரச்சனை உள்ளது என சில அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடிக்க முடியும்.

செரிமான பிரச்சனைகள்

வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்றுப் போக்கு அல்லது முறையற்ற குடலியக்கம் போன்றவை மோசமான குடல் ஆரோக்கியத்திற்கான முக்கிய அறிகுறிகளாகும்.

குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குறைவாக இருக்கும் போது, உணவுகள் சரியாக செரிக்கப்படாமல், உடலினுள் அதிகளவு வாய்வு உற்பத்தி செய்யப்பட்டு அடிக்கடி வாய்வு வெளியேற்ற வேண்டியிருக்கும்.

வைட்டமின் குறைபாடுகள்

வைட்டமின் மற்றும் கனிமச்சத்து குறைபாடுகளின் போது செரிமான மண்டலமானது மோசமாக செயல்படும். அப்போது உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியாமல், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் அவஸ்தைப்படக்கூடும்.

பெரும்பாலும் குடல் மோசமாக இருந்தால் வைட்டமின் டி, கே, பி12 மற்றும் பி7, மக்னீசியம் போன்ற சத்துக்களில் குறைபாடு ஏற்படும்.

தூக்கமின்மை

படுத்தவுடன் தூக்கம் வராமல் இருந்தாலோ அல்லது இரவில் அடிக்கடி விழிப்பு வந்தாலோ குடலில் பிரச்சனை உள்ளதாக அர்த்தம்.

குடல் மோசமான நிலையில் இருந்தால், செரடோனின் அளவு அதிகரித்து, அதனால் தூக்கமின்மை அல்லது தூங்குவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

வாய் துற்நாற்றம்

ஒருவரது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது, கெட்ட பாக்டீரியாக்களின் பெருக்கத்தால், கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்

எனவே உங்கள் வாய் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தினால், அதற்கு காரணம் உங்களது மோசமான குடல் என அறிந்து கொள்ளலாம்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகளான முகப்பரு, ரோசாசியா, எக்ஸிமா அல்லது சீரற்ற தோல் போன்றவையும் ஆரோக்கியமற்ற குடலுடன் தொடர்பு கொண்டதாகும்.

முக்கியமாக முகப்பரு மற்றும் சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் வருவதற்கு மோசமான குடல் ஆரோக்கியம் தான் காரணம்.

சர்க்கரை நோய்

பெருங்குடல் நுண்ணுயிர் தொற்று மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்க்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு உள்ளது.

ஆகவே ஒருவருக்கு திடீரென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் அவர்களது குடல் ஆரோக்கியம் மோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

0 comments:

Post a Comment