மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம்வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!

தேவகோட்டையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து

மழை பெய்து வருகிறது. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மக்கள் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இந் நிலையில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் பள்ளிகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து நிலவேம்பு கஷாயம் வழங்கப்படும்.

 நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் நிலவேம்பு கஷாயம் மாணவர்களுக்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

ஆனால் இந்த மாதம் வழங்க வேண்டிய நிலவேம்பு கஷாயம் பள்ளிகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

நகராட்சி ஆணையாளர்(பொ) ஜெயபாலிடம் கேட்டபோது, தற்போது பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை தொடங்கி இருக்கிறோம். அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் வழங்கப்படும், என்றார்.

0 comments:

Post a Comment