அறிவியல் அறிவோம் -கோதுமையிலிருந்து கோதுமை மாவு, அரிசியிலிருந்து அரிசி மாவு கிடைக்கின்றன. மைதா மாவு எதிலிருந்து கிடைக்கிறது ?

மைதாவும் கோதுமையிலிருந்துதான்

தயாரிக்கப்படுகிறது, நிதின். கோதுமையை அப்படியே அரைத்தால் கோதுமை மாவு. கோதுமையைச் சுத்திகரித்து அரைத்தால் மைதா மாவு. கோதுமையின் பழுப்பு நிறத்தைப் போக்குவதற்காக Benzoyl peroxide போன்ற ரசாயானத்தைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்யும்போது கோதுமை வெள்ளையாகிவிடுகிறது.

இவற்றிலுள்ள நார்ச்சத்தும் பிரித்து எடுக்கப்பட்டுவிடுகின்றன. இதுவே நாம் வாங்கும் மைதாவாக மாறிவிடுகிறது. மைதாவாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கு இழைக்கும் என்பதால், மைதாவை விட நார்ச்சத்து அதிகம் உள்ள கோதுமை மாவைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள்

0 comments:

Post a Comment