தேர்தல் துறை இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது
12/03/2016
பராமரிப்புப் பணி நடைபெறுவதன் காரணமாக, தமிழகத் தேர்தல் துறையின் இணையதளமான www.tnelections.gov.in சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதனால், பெயர் சேர்ப்பு, நீக்கம், வாக்காளர்
அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகளை இரு நாள்களிலும்
இணையதளத்தில் மேற்கொள்ள இயலாது.
இது குறித்து ராஜேஷ் லக்கானி வெள்ளிக்கிழமை கூறியது:-
இணையதளத்தின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளதால் அதன் தாங்குதிறன் போதியளவுக்கு இல்லை.
எனவே அந்த இணையதளத்தின் "சர்வர்' பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததும், இணையதளம் திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும் என்றார்.
0 comments:
Post a Comment