தேர்தல் பறக்கும் படை ஆய்வு இலவச காலணிகள் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை ஆய்வு இலவச காலணிகள் பறிமுதல்

12/03/2016

       தாராபுரம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இலவச காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தாராபுரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர், மூலனுார் பகுதியில், நேற்று ஆய்வு செய்தனர்.
 
       அவ்வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், ஆறு லட்சம் மதிப்பிலான, 4,605 ஜோடி இலவச காலணிகள் இருந்தன.விசாரணையில், இலவச காலணி வழங்கும் திட்டத்தில், மூலனுார் மற்றும் வெள்ளக்கோவில் ஒன்றியங்களுக்கு வழங்க, சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரிந்தது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், பறிமுதல் செய்யப்பட்டு, தாராபுரம் ஆர்.டி.ஓ., சரவணக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

0 comments:

Post a Comment