"அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'

"அனைத்துக் கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகள்'

14/03/2016

             தமிழகத்தில் உள்ள 60,000 கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்குவதுதான் இலக்கு என ஓராசிரியர் பள்ளிகளின் நிறுவனர் எஸ்.வேதாந்தம் தெரிவித்தார்.
             சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஓராசிரியர் பள்ளிகளின் 10-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது அவர் மேலும் கூறியதாவது:
        தமிழகத்தில் இதுவரை 600 ஓராசிரியர் பள்ளிகளில் சுமார் 22,000 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல, எல்லா மக்களும் சேர்ந்து இந்தப் பணியைச் செய்து வருகின்றனர். மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை.
          பள்ளிக்கு மாணவர்கள் போக முடியவில்லை என்றால், பள்ளியானது மாணவனைத் தேடிப் போக வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். அவரின் வாக்கை பின்பற்றி, மாணவர்களைத் தேடிப்போய் ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன.
         கல்வி மூலமாக ஒழுக்கத்தையும், கிராமங்களில் எழுச்சியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துவதுதான் எங்களது நோக்கம். குடிசைவாழ் மக்களுக்காக இதுவரை சுமார் 52 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.75 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
எங்களது சேவைகளால் கவரப்பட்டு தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ.50 லட்சம் அளித்து உதவினார். சில நிறுவனங்கள் எங்களது மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளன.
        தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்கி மாணவர்களுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பதுதான் எங்கள் நோக்கம் என்றார்.

0 comments:

Post a Comment