இ -சேவை' மையம்:கூடுதல் சேவைகள் அறிமுகம்

இ -சேவை' மையம்:கூடுதல் சேவைகள் அறிமுகம்

05/03/2016

        தமிழகம் முழுவதும், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள, 'இ - சேவை' மையங்களில், கூடுதல் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. 
 
             அதன் விவரம்:பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறலாம்மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுவை, 'ஆன்லைனில்' பதிவு செய்யும் வசதியும், ஏற்கனவே பதிவு செய்த மனுவின், தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஉணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடர்பான சேவைகள், பொது வினியோக திட்டம் தொடர்பான புகார்களை, தனியாகவும், பொது வினியோகத் திட்டம் அல்லாத புகார்களை தனியாகவும், புகார் மனு பதிவு செய்யும் வசதி, பதிவு செய்துள்ள மனுவின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுபயிற்சி ஓட்டுனர் உரிமம் பெறவும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு, நேர்காணலுக்கான தேதி தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

பதிவுத்துறையில், பத்திரப்பதிவுக்கு முன் அனுமதி நாள், பதிவு செய்து கொள்ளும் வசதி, திருமணம் செய்து கொள்வதற்கு முன் அனுமதி நாள் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது

போலீஸ் துறை புகார்களை, ஆன்லைனில் பதிவு செய்தல், மனுவில், தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளுதல், முதல் புலனாய்வு அறிக்கை, தொலைந்து போன வாகனம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment