ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்: அ.இ.ஆ.கூ., தலைவர் தகவல்.

09/04/2016

         ''ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை ஜூனிற்குள் அமல்படுத்தாவிட்டால் அகில இந்திய அளவில் ஆசிரியர்களின் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும்,'' என அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தலைவர் ராம்பால் சிங் தெரிவித்தார்.
 
          மதுரையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழாவில், புதிய அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:


ஆசிரியர்கள் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிராகரித்து வருகின்றன. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை மத்திய அரசு வரும் ஜூனில் அமல்படுத்த வேண்டும். தவறினால் அகில இந்திய அளவில் ஆசிரியர்களின் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும், என்றார்.ஓட்டு யாருக்கு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் ரங்கராஜன் பேசுகையில், ''மத்திய அரசு ஆசிரியருக்கு இணையாக மாநில ஆசிரியர்கள் சம்பளத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கையை தமிழகத்தில் அடுத்த முதல்வராக யார் வந்தாலும் நிறைவேற்ற வேண்டும். சட்டசபை தேர்தலில் விரும்பிய கட்சிகளுக்கு ஆசிரியர்கள் ஓட்டு அளிக்கலாம்,'' என்றார்.மாநில துணைத் தலைவர் தோந்தோ, தலைவர் காமராஜ், மாவட்ட செயலர் செல்லப்பாண்டியன், தலைவர் முத்துக்குமரன் பங்கேற்றனர். பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.

0 comments:

Post a Comment