சுலபமான 'மொபைல்' பண பரிமாற்றம்மத்திய அரசின் திட்டம் அறிமுகம்

17/04/2016

                           புதுடில்லி: 'ஸ்மார்ட்போனில்' இருந்து, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது போல், மிகவும் சுலபமாக, பணத்தை பரிமாறிக் கொள்ளும்,
யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது                  .மத்திய அரசின், தேசிய பணம் செலுத்தும் வாரியம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி இணைந்து, இந்த புதிய முறையை வடிவமைத்து உள்ளன.தற்போது, நாடு முழுவதும் நடக்கும் வர்த்தகத்தில், 95 சதவீதம் மற்றும் அதன் மதிப்பில், 65 சதவீதம் ரொக்கமாகவே செலுத்தப்படுகிறது
                      .நாட்டில், 50 கோடி பேரிடம் ஸ்மார்ட் போன் உள்ளதால், மொபைல் போன் மூலம்வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ள, மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
                     ரொக்கமாக பணத்தைசெலவிடுவதை குறைக்கும் வகையில், யு.பி.ஐ., திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.இது, மிகவும் சுலபமான, பாதுகாப்பான பண பரிமாற்ற திட்டம்.தற்போது, 29 வங்கிகள் இந்ததிட்டத்தில் இணைந்துள்ளன. இந்த திட்டத்தின்கீழ், ஒவ்வொரு முறையும், நம் வங்கிக் கணக்கு, 'கிரெடிட்' அல்லது, 'டெபிட் கார்டு' குறித்த விவரங்களை செலுத்த தேவையில்லை. பணத்தை பெறுபவரின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களும் தேவையில்லை.அதே நேரத்தில், இந்த புதிய திட்டத்தின் கீழ், பணம் உடனடியாக பரிமாற்றம் நடைபெறும். பணத்தை செலுத்தவும், பணத்தை பெறவும், இதை பயன்படுத்தலாம்.
எப்படி செயல்படுகிறது?
* தற்போதுள்ள பெரும்பாலான வங்கிகளின், 'மொபைல் -ஆப்' மூலம், பணத்தை செலுத்தும் வசதி இல்லை
* அதே நேரத்தில், இந்த புதிய முறையில், எந்த வங்கிக் கணக்குக்கும் பணத்தை அனுப்பலாம். அதேபோல், பணத்தை பெறும் வசதியும் கிடைக்கிறது
* வழக்கமாக, வங்கி அளிக்கும் இணையதள வங்கிச் சேவையில், பணத்தை அனுப்புபவர்,பல்வேறு விவரங்களை கொடுக்க வேண்டும்.அதேபோல், பணத்தை பெறுபவர் குறித்த விவரங்களும் கேட்கப்படும்
* இந்த புதிய திட்டத்தில், மொபைல் எண் அல்லது ஆதார் எண் அல்லது தனியாக ஒரு அடையாள பெயர் கொடுக்கப்படும். இதேபோல், பணத்தை பெறுபவரின் விவரத்தை தெரிவித்தால் போதும்
*l பணத்தை அனுப்ப அல்லது பெறுவது குறித்து, ஒரு சிறு தகவல் அனுப்பினால் போதும். மொபைலுக்கு ஒரு ரகசிய எண் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால், பண பரிவர்த்தனை முடிந்துவிடும்.

0 comments:

Post a Comment