வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 12 லட்சம் பேர் மனு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல் 

தமிழகத்தில் வாக்காளர்

பட்டி யலில் பெயர் சேர்க்க 11 லட்சத்து 91 ஆயிரத்து 878 பேர் விண்ணப் பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடங்கின. 

அக்டோபர் 31-ம் தேதிக்குள் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க அறி வுறுத்தப்பட்டது. மேலும் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத் தங்கள் தொடர்பாகவும் விண்ணப் பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டது. 

இதையடுத்து, செப்டம்பர் 9, 23 மற்றும் அக்டோபர் 7, 14 ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள 67,644 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம்கள் நடந்தன. 

அது மட்டுமின்றி ஆன்லைன் மூலமும் பலர் விண்ணப்பித்தனர். முதல் 3 முகாம்களில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 710 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். 

இதில் 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளித்திருந்தனர். 4-வது மற்றும் இறுதி முகாம் நேற்று முன்தினம் (14-ம் தேதி) நடந்தது. 

இந்த முகாமில் மட்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 லட்சத்து 80 ஆயிரத்து 440 பேர், பெயர் நீக்கத்துக்கு 40,529 பேர், முகவரி மாற்றத்துக்கு 39,755 பேர், தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு 30,825 பேர் என மொத்தம் 3 லட்சத்து 91 ஆயிரத்து 549 பேர் விண்ணப்பித்தனர். 

செப்டம்பர் 1-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை தாலுகா, மண்டல அலுவலகங்கள், சிறப்பு முகாம்கள், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் எண் ணிக்கை 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 ஆகும். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சத்து 91 ஆயிரத்து 878 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 80,231 பேரும் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 6,675 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 

அனைத்து விண்ணப்பங்களை பொறுத்த அளவில் சென்னை 1 லட்சத்து 9 ஆயிரத்து 454 விண் ணப்பங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஆன்லைனில் 78 ஆயி ரத்து 693 பேர் விண்ணப்பித் துள்ளனர். 

மேலும், இந்த மாதம் 31-ம் தேதி வரை தாலுகா அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் மட்டு மின்றி ‘www.elections.tn.gov.in’ மற்றும் ‘nvsp.in’ என்ற இணையதள முகவரிகளிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment