13-வயது வங்கி உரிமையாளர்:-ஆசிரியர்கள் எதிர்ப்பை மீறி வெற்றி கண்ட சிறுவன்!


இப்போது உள்ள சிறுவர்கள் பல்வேறு புதிய புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும், அதன்படி பெரு நாட்டை சேர்ந்த 13-வயது ஜோஸ் டோல்ஃபோ க்விஸோகலா ஒரு வங்கியை 6ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

குறிப்பாக இவர் நடத்தி வரும் வங்கியில் 2000 பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஜோஸுக்கு 7-வயது இருக்கும் போது தன்னுடைய பள்ளி நண்பர்கள், தின்பண்டங்களுக்கும், பொம்மைகளுக்கும் அதிகமாகச் செலவு செய்வதுபோல் தோன்றியது. எனவே இதற்கு பதிலாகக் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்தால், அர்த்தமுள்ள செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

சேமிப்பு .
அதன்பின்பு ஜோஸ் என்ன செய்தார் என்றால், பணம், வங்கி, சேமிப்பு குறித்து தனது பெற்றோரிடமும் வங்கி அதிகாரிகளிடமும் .
ஆலோசனை பெற்றார்.

அந்த சமயம் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. பெற்றோரின் உதவியின்றி மாணவர்களே ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பாதித்து மாணவர்களுக்கான வங்கியில் சேமிக்க வேண்டும் என்பது தான்.

 தேவையற்ற சில பொருட்கள்
அதன்படி மாணவர்கள் தங்கள் வீட்டிலுள்ள தேவையற்ற சில பிளாஸ்டிக் பொருட்கள், பத்திரிக்கை, போன்றவற்றை கொடுக்க வேண்டும். பின்பு அந்த பொருட்களை விற்று, அதற்கு உரிய தொகையை அந்த மாணவரின் பெயரில் வங்கியில் வரவு வைக்கப்படும். மேலும் இப்படிச் சேமிக்கும் பணத்தைத் தேவையானபோது மாணவர்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்
என்று தன்னுடைய திட்டத்தை பள்ளியில் சொன்னார் ஜோஸ்.

 தடை அதை உடை:
ஆனால் 7-வயது மாணவன் வங்கியை நிர்வாகம் செய்ய இயலாது என்றும், இது பயன் தாரத திட்டம் என்று ஆசிரியர்கள் சொல்லிவிட்டனர். பின்பு ஜோஸுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட பள்ளியின் முதல்வரும் துணை முதல்வரும் உதவுவதற்கு
முன்வந்தனர்.

எனவே முதல்வரின் உதவியோடு வங்கியை ஆரம்பித்துவிட்டேன், இருந்தபோதிலும் சில ஆசிரியர்கள் மாணவர்கள் மிக மோசமாக கிண்டல் செய்தனர், அதைப் பொருட்படுத்தமால் தொடர்ந்து வங்கியை செயல்படுத்த ஆரம்பித்தார் ஜோஸ்.

பின்பு அவருடைய வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஜோஸ்-ஐ புரிந்துகொண்டு ஆர்வத்துடன் வங்கியின் வாடிக்கையாளர்களாக
மாறினார்கள். தேவையற்ற பொருட்களை மறுசுழுற்சி செய்யும் நிறுவனத்துடன் பேசி, மாணவர்கள் கொடுக்கும் பொருட்களுக்கு
கூடுதல் பணம் தரும்படி ஒப்பந்தம் செய்துகொண்டார் ஜோஸ்.

 மாதம் ஒரு கிலோ பொருட்கள்:
மேலும் இவர் ஆரம்பித்த வங்கியில் கணக்கு ஆரம்பிக் வேண்டும் என்றால் 5 கிலோ மறுசுழற்சி பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர் அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு மாதம் ஒரு கிலோ பொருட்களை கொடுத்தால் கூடப் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது.

 1டன் மறுசுழற்சி
சில வாரங்களில் இவரது வங்கியில் 200 வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர், தற்சமயம் 2ஆயிரம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
பின்பு 2012-2013 ஆண்டில் மட்டும் 1டன் மறுசுழற்சி பொருட்களை 200 வாடிக்கையாளர்கள் கொண்டுவந்து சேர்த்துள்ளனர். பின்பு இந்த 6 ஆண்டுகளில் நான் அனுபவத்தின் மூலம் அதிகம் கற்றுக்கொண்டேன் என்றும், பெரியவர்களுடன் தயக்கமின்றி பேச முடிகிறது என்றும் ஜோஸ் தெரிவித்துள்ளார். இவரின் வெற்றி பெரு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது என்பத குறிப்பிடத்தக்கது.

Related Posts:

0 comments:

Post a Comment