5 பல்கலைக் கழகங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி - அமைச்சர் அன்பழகன்

5 பல்கலைக் கழகங்களுக்கு

5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
       
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தின 11ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.  இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் வரிசையில் தமிழகத்தில் இருந்து ஐந்து பல்கலைக் கழகங்கள் தேர்வு பெற்று இருப்பதால் தலா ஆயிரம் கோடி ரூபாய் வீதம் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற மத்திய அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்

0 comments:

Post a Comment