கண்டிப்பு! பொய் செய்தி தடுக்காத சமூக தளங்களுக்கு... நடவடிக்கை எடுக்க மத்திய அரசு கடும் உத்தரவு

 'நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பொய்யான தகவல்கள், புரளிகள் பரவுவதை தடுக்க வேண்டும்' என, சமூக வலைதளங்களுக்கு, மத்திய அரசுகண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.

 பொய் செய்திகளை, தடுக்காத, சமூக தளங்களுக்கு, கண்டிப்பு!,

சமூக வலைதளங்களின் பயன்பாடுஅதிகரித்து வரும் நிலையில், அவற்றை தவறாகப் பயன் படுத்துவதும் அதிகரித்து உள்ளது.சமூக வலை தளங்கள் மூலமாக, பொய்யான செய்திகளை, படங்களை அனுப்பி, தவறான பிரசாரம் நடத்தப்படுகிறது. 

இதுபோன்ற தவறானதகவல்களால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட, சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில், பொது அமைதி, ஒற்றுமையுணர்வையும் பாதித்துள்ளது. இதையடுத்து, 'தவறான செய்திகள், படங்களை கட்டுப்படுத்தவும், அவற்றை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக வலைதளங்களை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆலோசனை

இது போன்ற பொய்யான செய்திகள் குறித்த தகவல்களை, போலீஸ் உள்ளிட்ட அரசின்

விசாரணை அமைப்புகளுக்கு உடனடியாக அளிப்பதுடன், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

'கூகுள், டுவிட்டர், வாஸ்ட்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம்' போன்ற சமூக வலைதளங்களின் பிரதிநிதி களுடன், மத்திய அரசின் உள்துறை செயலர் ராஜிவ் காப்பா, சில மாதங்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்நிலையில், ஏற்கன வே நடந்த கூட்டங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு சமூக வலைதளங்களின் பிரதி நிதிகளுடன், மத்திய உள்துறை செயலர் ராஜிவா கப்பா, சமீபத்தில் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து, உள்துறை அதிகாரிகள் கூறியதாவது:

உள் நாட்டு பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சமூக வலை தளத் தில் பதிவிடப்படும் செய்திகள், படங்கள் குறித்த தகவல்களை, போலீஸ் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.இந்த நிறுவனங்கள், வெளிநாட்டில் இருந்து இயங்குவதால், புகார்கள் தெரிவிக்கவும், தகவல்களை தெரிவிக்கவும், இங்கு அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என, ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது.அதன்படி, சிலநிறுவனங்கள், குறைதீர் அதிகாரிகளை நியமித்து உள்ளன. மீதமுள்ள நிறுவனங்கள், விரைவில் நியமிப்பதாக தெரிவித்து உள்ளன.

கண்காணிப்பு

பொய்யான தகவல்கள் பரவாமல் தடுப்பதை 

கண்காணிப்பதுடன், அதுபோன்ற செய்திகளை, உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ரூ.4.72 கோடி

அபராதம்பிரிட்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற தகவல் சேகரிப்பு நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை திருடி, பல்வேறு நாடுகளுக்கு விற்றது, கடந்தாண்டு அம்பலமானது. பல நாடுகளில், தேர்தல்களில் இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக, பிரிட்டனின் தகவல் ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்தியது. அதில், 'பயனாளிகளின் தகவல் களை முறையாக பராமரிக்காமல், மற்றவர் களுக்கு பகிர்ந்து அளித்த தன் மூலம், பயனாளிகளின் தனிநபர் சுதந்திரம் மீறப்பட்டு உள்ளது. இந்தக் குற்றத்துக்காக, 4.72 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என, தகவல் ஆணையர் அலுவலகம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment