பள்ளிகளில் மாணவர்களின் வருகை
பதிவை அலைபேசி செயலியில் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கு முதற்கட்டமாக ஆசிரியர்கள், மாணவர்களின் விபரங்களை புகைப்படத்துடன் ஆன்லைனில் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வருகையை பதிவு செய்ய அலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 'கூகுள் பிளே ஸ்டோரில்' (TN EMIS CELL)பதிவிறக்கம் செய்யலாம். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பயன்படுத்துபவர் பெயர், கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் இருவேளையும் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். இதன் பதிவுகள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் இயக்குனரகத்திற்கு நேரடியாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.மாணவர்களின் பெயர்கள் வரிசையாக இருக்கும்.
வராத மாணவர்களின் பெயர் எதிரே 'டிக்' செய்ய வேண்டும். பதிவுகளை தலைமையாசிரியர்களும், அவர்களை முதன்மை கல்வி அலுவலரும் தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment