தினமும் நல்ல ஆரோக்கியமான
உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும் அதனை எளிதில் குணமாக்கலாம்.
அந்த வகையில் மிகவும் கொடிய நோயான புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு தினமும் அதனை உண்டு வந்து புற்றுநோய் செல்களை அழிக்க முயற்சி செய்யுங்கள்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் உள்ள இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
திராட்சை
தினமும் திராட்சை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.
பூண்டு
தினமும் உணவில் பூண்டை சேர்த்து வந்தால் அதில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது.
கேரட்
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
காளான்
காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும். காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
நட்ஸ்
நட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். எனவே தினமும் உணவில் நட்ஸ் சேர்த்து வாருங்கள்.
பப்பாளி
பப்பாளியை அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.
அவகேடோ
அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. மேலும் தக்காளியில் உள்ள லைகோபைன் வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும்
0 comments:
Post a Comment