டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள்....!

டெங்கு காய்ச்சல் கொசுவின் மூலம்பரவுகிறது. இது திடீரென பாதிப்பைஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி,உடம்பு வலி, கடுமையான தசை வலி,சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின்பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகைகலர் மாற்றத்தை ஏற்படுத்தும். இதில்குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம்,தலைவலி தான் எல்லா டெங்குநோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய்அறிகுறிகள் ஆகும். இது நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம்,கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்குவகையான வைரஸ்களால்உண்டாக்கபடுவதால், ஒருவருக்கேபலமுறை டெங்கு வரலாம். இந்த நோயால்பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான முட்டுமற்றும் தசை வழியால் பாதிக்கபடுவதால்,இதற்கு எலும்பு ஒடியும் நோய் (BREAKBONE)நோய் என்று பெயர்.

 

எப்படி பரவுகிறது?: ஏடிஸ் ஈஜிப்டி என்னும்இந்த வைரஸ், பகலில் கடிக்கும் கொசு மூலம்பரவுகிறது. இந்த கொசு நோயால்பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள்வைரஸை எடுத்து, மற்றவர்களுக்குபரப்புகிறது. இந்த கொசு அநேகமாகவீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசுஅநேகமாக மழை காலங்களில்இனபெருக்கம் செய்யும்.

 

மழை இல்லாத காலங்களில், தண்ணீர்தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள்,கேன்கள், தேங்காய் செரட்டைகள்,டையர்கள், போன்றவற்றில் இனபெருக்கம்செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம்இல்லாமல், நேரிடையாக நோயாளிடம்இருந்து மற்றவர்களுக்கு பரவாது.அறிகுறிகள்: ஆரம்பதில் குளிர் ஜுரம்,தலைவலி, கண்ணை சுற்றி வலி, முதுகுவலி, பின்னர் கடுமையான கால் மற்றும்மூட்டு வலி நோய் வந்து சில மணிநேரத்தில்வரும் காய்ச்சல். இலேசாக, நாடித்துடிப்புகுறைதல், இரத்த அழுத்தம் குறைதல், .கண்கள், சிவந்து போகலாம்.

உடலில் தோலில் சிகப்பு நிற மாற்றம்ஏற்படும். கழுத்து மற்றும் பிறப்பு உறுப்புஅருகே நெறிகட்டலாம். இந்த ஜுரம் மற்றும்மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 நாட்கள்வரை இருந்து, பின்னர் திடீரென உடல்வெப்பம் குறைந்து, அதிகமான வியர்வைஏற்படும்.சிகிச்சை முறை இதற்கு தனியானமாத்திரை மருந்துகள் கிடையாது.காய்ச்சலை குறைக்க சாதாரணபரசெடமால், போதிய ஒய்வு, நன்றாக நீர்ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்குசிகிச்சை.

மருத்துவர் அறிவுரை இல்லாமல் வலிநிவாரணிகள் எடுத்து கொள்ள கூடாது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்துஅரசு ஆஸ்பத்திரிகளிலும் நிலவேம்பு குடிநீர்இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சித்தவைத்தியத்தின் மூலம் எளிதில் குணப்​படுத்தலாம் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள். டெங்கு காய்ச்சலைகட்டுப்படுத்த பொதுமக்கள் கூடும் பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பலஇடங்களிலும் பொதுமக்களுக்கு நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலால்குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையைஅதிகரிக்க பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை, மணப்பாகு வழங்கப்படுகிறது.இந்த மருந்துகளை தமிழக அரசேபரிந்துரைத்து வருகிறது. நிலவேம்பு குடிநீர்சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர்,விலாமிச்சு வேர், சந்தனத்தூள், பேய்புடல்,கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம்என்று ஒன்பது வகையான இயற்கைமருந்துப் பொருட்கள் கலந்து இருக்கின்றன.இதில் நிலவேம்பு, விலாமிச்சு வேர்,பேய்புடல், மிளகு, பற்​பாடகம் ஆகிய ஐந்துபொருட்களும் உடலின் வெப்பத்தை அகற்றிகாய்ச்சலைப் போக்கும் தன்மைகொண்டவை.

0 comments:

Post a Comment