!பரிசு தொகை இந்திய மதிப்பில் ரூ. 7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை பெறுகின்றன.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகள் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கின.
இந்நிலையில் நாள்தோறும் ஒவ்வொரு துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் இன்று (8.9.18) பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கியதற்காகவும், பருவ நிலை மாற்றம் சார்ந்த பொருளாதார ஆய்வுக்காகவும் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது
0 comments:
Post a Comment