வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.19, 20, 21 தேதிகளில் மழை: வானிலை ஆய்வு மையம்


வங்கக் கடலில் புதிதாக உருவாகவுள்ள

காற்றழுத்த தாழ்வுப்
பகுதியால் நவம்பர் 19,20,21 தேதிகளில் தமிழகம், புதுவையில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவம்பர் 19,20,21 தேதிகளில் தமிழகம், புதுவையில் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

“தமிழகப் பகுதிகளைக் கடந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த 'கஜா' புயல் தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து கேரள பகுதிகளைத் தாண்டி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உள்ள லட்சத்தீவுகள் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது.

அது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.

தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடல் பகுதியும், மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது வரும் நவம்பர் 19, 20 தேதிகளில் மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதனால் வரும் நவம்பர் 19, 20, 21 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழைபெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கையில் 17 செ.மீ. மழையும் கொடைக்கானல் பகுதியில் 14 செ.மீ. மழையும் பெய்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் தென் கிழக்கு அரபிக்கடலில் நவம்பர் 18, 19 தேதிகளிலும், தென் மேற்கு அரபிக்கடலில் நவம்பர் 19, 20 தேதிகளில் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கக்கடலில் மீனவர்கள் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நவம்பர் 18-ம் தேதியும், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 19, 20 தேதிகளிலும் செல்ல வேண்டாம் என்று கோரப்படுகிறார்கள்.

சென்னைக்கு தற்போது லேசான மழைதான். நவம்பர்19, 20 தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது''.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்

0 comments:

Post a Comment