ஜியோ நிறவனம் இந்திய சந்தையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இந்நிறுவனம். மேலும் இந்நிறுவனம் ஜிகாஃபைபர் சேவையை அறிமுகம் செய்தது,குறிப்பாக இந்த சேவை 1,100 இந்திய நகரங்களுக்கு வழங்கப்படும என ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைக்கு வேண்டி முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சோதனை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த சேவையை மக்கள் பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ ஜகாஃபைபர் சேவை
ஜியோ ஜகாஃபைபர் சேவை அறிவிப்பு பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்பட்டது, இதை தொடர்நது
முதலில் எந்தெந்த நகரங்களில் இந்தி ஜியோ பிராட்பேண்ட் சேவை கிடைக்கும் என பல எதிர்பார்ப்புகள் கிளிம்பியது.
29 இந்திய நகரங்களில்
இந்நிலையில் 29 இந்திய நகரங்களில் இந்த சேவை வழங்கப்படும் என்றும், அந்த நகரங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம். மேலும் இப்போது வெளியிடப்பட்ட நகரங்களில் இருக்கும் ஆர்வமுள்ள நபர்கள் ஜியோ
சேவையை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம்.
அதன்படி சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பெங்களூரு, ராஞ்சி, புனே, இந்தூர், போபால், லக்னோ, கான்பூர்,பாட்னா, அலகாபாத், ராய்பூர், நாக்பூர்,காஸியாபாத், லூதியானா, நாசிக், பரிதாபாத், கௌஹாத்தி, ஆக்ரா, மீரட், ராஜ்கோட், ஸ்ரீநகர், கோடா, சோலாபூர், அமிர்தசரஸ், சண்டிகர், ஜோத்பூர் போன்ற நகரங்களில் இந்த சேவை கிடைக்கும்.
100ஜிபி மாதந்திர இணைய சேவை
இருந்தபோதிலும் இப்போது கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, பின்பு இதன் அறிமுக சேவை மூலம் 3மாதங்களுக்கு இலவசமாக 100ஜிபி மாதந்திர இணைய சேவை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment