மழை பற்றிய முக்கிய அறிவிப்பு!!!



வங்கக்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான மேலடுக்கு சுழற்சி சற்று மேற்கு நோக்கி நகர்ந்து இன்று தற்போது இலங்கை மேற்கு பகுதி மாலதீவு வரை  பரவியிருக்கிறது இந்த சுழற்சியானது வங்கக்கடலில் உள்ள ஈரம் மிகுந்த காற்றை டெல்டா மற்றும் வடதமிழகம் ஊடாக ஈர்ப்பதன் காரணமாக இன்று மதியத்திற்கு மேலாக இலங்கையை ஒட்டிய வடதமிழகம் வேதாரணியம், வேளாங்கண்ணி,நாகை தெற்கு மற்றும் வடஉள்தமிழக பகுதிகளான திருவாரூர், குடவாசல், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதிகளில் முதலில் மிதமான மழை தொடங்கி பிறகு படிபடியாக மழை அதிகரிக்கும்*

*நாகை,காரைக்கால், சீர்காழி ,சிதம்பரம் பகுதிகளில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மதியத்திற்கு மேலாக சாரல் மழையுடன் தொடங்கி பிறகு மாலைக்கு மேலாக மழை அதிகரிக்கும் இந்த மழையானது  மேலும் வடக்கு நோக்கி முன்னேறி கடலூர், புதுச்சேரிக்கும் மற்றும் சென்னைக்கு  மழையை கொடுக்கும்*

*தென்தமிழகம் மற்றும் வடஉள்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது*

*தற்போது புயல் போன்ற நிகழ்வுகள் ஏதும் அருகில் இல்லை அச்சம் வேண்டாம்*

*இந்த மேலடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெறுவது நகர்வது குறித்த மேலான தகவலை பிறகு பதிவு செய்கிறேன்*

*இந்த மேலடுக்கு சுழற்சி மேலும் மேற்கு நோக்கி குமரிக்கடல் பிறகு மாலதீவு, அரபிக்கடல் பகுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

0 comments:

Post a Comment