புதுக்கோட்டை,நவ,12- தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட மேல்நிலைப்பள்ளி மையங்களில் நீட்,ஜே.இ.இ பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த மையங்களில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொலைக்காட்சி துறையின் சார்பில் செட்டாப் பாக்ஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந் தது.
அதன்படி புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் 13நீட் பயிற்சி மையங்களுக்கு அந்த மையங்களின் தலைமையாசிரியர்களிடம் செட்டாப் பாக்ஸினை இன்று 12-11-2018(திங்கட்கிழமை)மாலையில் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கி செட்டாப் பாக்ஸின் பயன்களை எடுத்துக்கூறி நீட்,ஜே.இ.இ பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும், செட்டாப்பாக்ஸின் வாயிலாக காணொளிக்காட்சி முறையினை சிறப்பான பயன்படுத்திக்கொள்ளவும் வாழ்த்தினார்...
0 comments:
Post a Comment