கரையை கடந்தது கஜா புயல்

Friday, November 16, 2018


வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மக்களை மிரட்டி வந்த கஜா புயல் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
புயல் கரையைக் கடந்தாலும், அதன் தீவிரம் அடுத்த 6 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும். மேலும் பலத்த மழையும் பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment