தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் சனிக்கிழமை ( நவம்பர் 10) செயல்பட உள்ளன.
தீபாவளிக்கு முந்தைய தினமான கடந்த திங்கள்கிழமை (நவம்பர் 5) அரசு பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் 10-ஆம் தேதிறு இரண்டாவது சனிக்கிழமையில் அரசு அலுவலகங்களும், பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சனிக்கிழமை (நவம்பர் 10) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்பட உள்ளன.
தனியார் பள்ளிகள்: தனியார் பள்ளிகளைப் பொருத்தவரையில், ஒன்றாம் வகுப்புக்குக் கீழ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment