இன்று குழந்தைகள் தினத்தையொட்டி வண்ண உடை அணிந்து வர மாணவர்களுக்கு சலுகை

நாட்டின் முதல் பிரதமரான, ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும், குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக பள்ளிகளில், குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக பள்ளி கல்வி சார்பில், குழந்தைகள் தின விழா மற்றும், எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளி வளாகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளிகளில் பல்வேறு தலைப்புகளில், ஓவியம், எழுத்து, பேச்சு மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், சீருடைக்கு பதில், வண்ண உடைகள் அணிந்துவர சலுகை அளிக்கப்பட்டுள்ளது.பல பள்ளிகளில் மாணவ, மாணவியரை மகிழ்ச்சிப்படுத்த, ஆசிரியர், ஆசிரியைகள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

0 comments:

Post a Comment