சென்னை: இந்திய வானிலை மைய இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்து கஜா புயல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 3 நாட்களாக வங்கக் கடலில் நங்கூரம் பாய்ச்சி கொண்டு இருந்தது. இந்நிலையில் கஜா இன்று இரவு கரையை கடக்கிறது.
இது கடலூர்- நாகை இடையே கரையை கடப்பதால் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புயலால் 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது 3 நாட்கள் ஒரே இடத்தில் இருந்ததால் இது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பயண பாதை
மேற்கொள்ள
இதனிடையே தற்போது இதன் பயண பாதையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கஜா புயல் குறித்து அறிந்து கொள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுடன் இந்திய வானிலை மைய தலைமை இயக்குனர் ரமேஷ் ஆய்வு மேற்கொள்ள சென்னை வந்தார்.
சென்னை
நுங்கம்பாக்கம் அலுவலகம்
அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்கள், அதிகாரிகள் கஜா புயலின் தன்மை குறித்து தலைமை இயக்குநர் கே.ஜே.ரமேஷுக்கு விளக்கினர்.
கரையை கடக்கும்
மழை பெய்யும்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் இரவு 8 மணியில் இருந்து 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்கும். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
புயல் கரையை
சாதனை
மேலும், புயல் கரையை கடந்த பிறகு தமிழகத்தில் உள்மாவட்டங்களிலும், கேரளாவிலும் மழை பெய்யும். நாளை மாலை கஜா புயல் அரபிக் கடலுக்கு செல்லும் என ரமேஷ் கூறியுள்ளார். இந்திய வானிலை மைய தலைமை இயக்குநரையே சென்னைக்கு வரவழைத்தது கஜாவின் சாதனையாக கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment