சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம்
மிளகனூர் கிராமத்தில்இயங்கும் அரசுஉயர்நிலைப்பள்ளியில் தகவல்தொழில்நுட்பத்தைபயன்படுத்தி கல்விப்பணி
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்சுற்றறிக்கை விடும் நோட்டிற்குகுட்பை சொல்லிவிட்டு, ஆப்மூலமாக பல அறியதகவல்களை இப்பள்ளிவழங்கிவருகிறது.
* நமது பள்ளி செயலியைஉருவாக்கியதில் பெருமிதம்கொள்கிறோம்
* இது முற்றிலும் மாணவர்கள்மற்றும் பெற்றோரின்நலனுக்காக
உருவாக்கப்பட்டுள்ளது.
* இந்தச் செயலி மூலமாகமாணவர்களின்வளர்ச்சியும்,பள்ளியின்வளர்ச்சி நிலையயும் எளிதில்அரசின் கவனத்தையும் நமதுபள்ளியைச் சுற்றியுள்ளதனியார் பள்ளிகளில் பயிலும்மாணவர்களின் கவனத்தையும்ஈர்த்து நமது பள்ளியை ஒருமுன்மாதிரிப் பள்ளியாகஉருவாக்குவதே இந்த செயலிஉருவாக்கப்பட்டுள்ளதன்நோக்கமாகும்.
வாருங்கள், இந்தச் செயலியில்உள்ள சிறப்பம்சங்கள் பற்றிஉங்களுக்கு
விளக்குகிறேன்.
* முகப்பு பக்கத்தில்தலைமையாசிரியர் பெயரும்பள்ளியின் பெயரும்
தொலைபேசி எண்ணுடன் இடம்பெற்றிருக்கும்.
தொலைக்காட்சியில் ஓடும்Scrolling போல அறிவிப்புசெய்திகள் என்ற பகுதிஉள்ளது.
* அடுத்து இரண்டாவது முகப்புபக்கத்தில் ஆறு விதமானதலைப்புகளில் கட்டங்கள்அடங்கிய பகுதி காணப்படும். அந்தப் பகுதி குறித்து கீழ்காண்போம்.
* இந்த ஆறு கட்டங்களுக்கு மேல்பகுதியில் பள்ளியின் நிகழ்ச்சிநிரல்கள் தொடர் செய்தியாகநகர்ந்து செல்லும். அதில்ஏதாவது ஒன்றை தட்டினால்அது குறித்த முழு செய்திகுறித்த விபரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
1. ஆளுமை பகுதி (Admin)
ஆளுமைப் பகுதி என்பது நமதுபள்ளி செயலி முழுவதும்தலைமையாசிரியர்கட்டுப்பாட்டில் இருக்கும். இதில்பதிவேற்றம் செய்யப்படும்நிகழ்ச்சி குறித்த செய்திகள், புகைப்படங்கள், பள்ளியில்பயிலும் மாணவர்கள் குறித்தஅனைத்து விபரங்களும்தலைமையாசிரியர்அனுமதியின்றி யாரும்செயல்படா வண்ணம்கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்தலைமையாசிரியர் கவனத்தின்மூலமாக.
2. பெற்றோர் பகுதி (Parents)
* இதில் மாணவர்களின்பெற்றோர் குறித்த விபரங்கள்அடங்கியிருக்கும்.
* மாணவர்கள் பள்ளிக்குவருகை புரிந்த நாட்கள் மற்றும்அவர்கள் தேர்வில் பெற்றமதிப்பெண்கள் குறித்தவிபரங்கள் அனைத்தும் பள்ளிதலைமையாசிரியர் மூலம்பெற்றோருக்குதெரியப்படுத்தப்படும்.
* பெற்றோர் ஆசிரியர்சந்திப்புகள் குறித்தஅறிவிப்புகள் தேதிகள்இதன் வாயிலாகஅனுப்பப்படும்.
3. மாணவர்கள் பகுதி (Student)
* மாணவர்கள் பகுதியில்ஒவ்வொரு மாணவரின்தனிப்பட்ட விபரங்கள்அடங்கியிருக்கும்.
* ஒவ்வொரு மாணவருக்கும்ஒரு உள்நுழை குறியீடும்மற்றும் இரகசிய சொல்லும்தரப்படும். இவற்றைப்பயன்படுத்தி மாணவர்கள்உள்நுழைந்து தங்கள்விபரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
* ஒவ்வொரு மாணவரும்பள்ளிக்கு வருகைபுரிந்தநாட்களானது இந்தப் பகுதியில்பதிவேற்றம்செய்யப்பட்டிருக்கும்.
i. மாணவர்களின் குறைகள்பகுதி
* இதன் வாயிலாக மாணவர்கள்தங்கள் குறைகளைதலைமையாசிரியருக்குத்தெரியப்படுத்த முடியும்.
* ஒவ்வொரு மாணவரும்தங்கள் பள்ளியின் நிலைகுறித்தும் தனது வகுப்புஆசிரியர் குறித்த நிறைகள்மற்றும் குறைகளை நேரடியாகபள்ளி நிர்வாகத்திற்குதெரியப்படுத்திக் கொள்ளலாம்.
* மாணவர்களின்பெற்றோருக்கும் தங்கள் பள்ளிகுறித்தும், பள்ளி ஆசிரியர்கள்குறித்தும் தங்கள் நிறை, குறைகளை தெரிவிக்கஉதவியாக இருக்கும்.
* மாணவர்கள் தங்கள்பள்ளிக்கு வரமுடியாதபட்சத்தில் ஆப் மூலமாகவேவிடுப்பு எடுத்துக் கொள்ளஅனுமதி வேண்டுதல் பகுதியும்(Leave Request) உள்ளது.
* மாணவர்கள் மற்றும்பெற்றோர் அளித்த புகார்கள்குறித்து பள்ளிதலைமையாசிரியர் உண்மைநிலையை அறிந்து எளிதில்அதற்கான தீர்வு எடுக்கஇந்தப்பகுதி பயனுள்ளதாகஅமையும்.
4. நமது பள்ளி (namathu palli) :
நமது பள்ளி என்ற பகுதியில்நமது பள்ளியினுடையசிறப்புகள் மற்றும் நமது பள்ளிஅமைந்திருக்கும் இடம், சுற்றுச்சூழல் பற்றிய விபரங்கள்இடம்பெற்றுள்ளன.
5. Gallery :
இப்பகுதியை இரண்டுபகுதிகளாகப் பிரித்துள்ளோம். இதில் Photo gallery, Video gallery என இரண்டு பகுதிகள்உள்ளன. Photo gallery இல் நமதுபள்ளியின் புகைப்படம் மற்றும் நம் பள்ளி மாணவ, மாணவிகள்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்டபுகைப்படம், பரிசுகள் வழங்கும்போது எடுக்கப்பட்டபுகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. Video Gallery இல்நமது பள்ளியின் video காட்சிகள்மற்றும் நம் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட video காட்சிகள், மாணவ மாணவிகள்சுற்றுலா சென்ற போதுஎடுக்கப்பட்ட video காட்சிகள்ஆகியவை இடம்பெற்றுள்ளன.
6. நிகழ்வுகள் பகுதி (Events)
* நிகழ்வுகள் பகுதியில்பள்ளியில் நடந்த முக்கியநிகழ்ச்சிகள் குறித்த செய்திஇடம் பெற்றிருக்கும்.
* இதன் மூலம் மாணவர்களின்திறன் வெளிப்படுத்தப்படும்.
* மாணவர்கள் செய்தசமூகப்பணி (தங்கள் இருக்கும்பகுதி மற்றும் பள்ளிகளைச்சுற்றியுள்ள பகுதிகளில்நடைபெற்றவை) இடம் பெறும்.
7. தேர்வு முடிவுகள் பகுதி (Result)
* தேர்வு முடிவுகள் பகுதியில்மாணவர்களின் தேர்வுமுடிவுகள் குறித்த செய்திகள்பதிவேற்றம் செய்யப்படும்.
* ஒவ்வொரு வகுப்புமாணவர்களின் பருவத்தேர்வுமுதல் சிறப்புத் தேர்வுகளின்மதிப்பெண்கள் அவர்களுக்குஇதன் வாயிலாகதெரியப்படுத்தப்படும்.
* உடல்நிலை சரியில்லாதநேரத்தில் பள்ளிக்கு வரஇயலாத மாணவர்கள் தங்கள்தேர்வு முடிவுகளைவீட்டிலிருந்தே அறிந்து கெள்ளமுடியும்.
* தேர்வு முடிவுகள்அறிவிக்கப்படும் பொழுதுகூடவே ஒவ்வொரு மாணவரும்
தங்கள் பாடவாரியாகப் பெற்றமதிப்பெணகளை இந்தப்பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
8. அறிவிப்பு பகுதி(Announcement)
* இதில் பள்ளிகளில் வரும்நாட்களில் நடைபெறவிருக்கும்முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தசெய்திகள் குறிப்பிட்ட தேதிவாரியாக வெளியிடப்படும்.
* அனைத்துஅறிவிப்புகளைவிடவும்மாணவர்களின்உயிர்நாடியாகக் கருதப்படும்அரசு விடுமுறை நாட்கள்குறித்த அறிவிப்புகள் இதில்முக்கியமாக இடம்பெற்றிருக்கும்.
* பள்ளியில் பருவத்தேர்வுகள்முதல் அரசுப் பொதுத்தேர்வுகுறித்த தேதி அட்டவணைப்பட்டியல் குறித்த அறிவிப்புகள்அடங்கியிருக்கும்.
9. தேர்வுக்கு தேவையானகுறிப்புகள் (Study materials)
* இந்தப்பகுதியில்மாணவர்களுக்குத்தேவையான தேர்வுகாலங்களில் பயன்படும்வகையில்பாடப்புத்தகத்திலிருந்துஎடுக்கப்பட்ட முக்கியவினாக்களின் தொகுப்பு PDF வடிவில் பதிவேற்றம்செய்யப்பட்டிருக்கும்
* மாணவர்கள் தங்கள்தொலைபேசியில் பதிவிறக்கம்செய்து படித்துக் கொள்ளலாம்
10. எங்களை தொடர்புகொள்ள(Contact)
* இந்தப் பகுதியை அனைவரும்பயன்படுத்தும் வகையில்அமைந்துள்ளது.
* இந்தச் செயலி குறித்தகருத்துக்களை பொது மக்கள்அனைவரும் இதில் பதிவுசெய்யலாம். இந்தச் செயலியில்உள்ள நிறை மற்றும்குறைகளை இதில் தெரிவிக்கும்வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படிக்கு
அரசுஉயர்நிலைப்பள்ளி
மிளகனூர், சிவகங்கைமாவட்டம்
தலைமையாசிரியர்
முனைவர் V.M.விநாயகமூர்த்தி
செல் : 9976935585
0 comments:
Post a Comment