எல்ஜி நிறுவனம் அடுத்த வருடம்
ஜனவரி மாதத்தில் காகிதம் போன்றுசுருட்டும் வகையிலான டிவி-யை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடுகளில் டிவி என்பது முதன்மையான பொழுதுபோக்கு சாதனமாக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டிவியானது ஒவ்வொரு காலகட்டங்களில் பல்வேறு வகையில் மாற்றமடைந்து கொண்டே வருகிறது. தற்பொழுது எல்.இ.டி டி.விக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் சிறப்பு என்னவென்றால் இவற்றின் திரையை மிகவும் மெல்லியதாக உருவாக்க முடியும்.
அடுத்த கட்டமாக வளையும் திறன் கொண்ட டிவி-யை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடக்கவிருக்கும் CES எனப்படும் விழாவில் இந்த டி.வி அறிமுகப்படுத்தப்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
OLED வகை டி.வியான இதைச் சுவரில் பொருத்திக்கொள்ள முடியும். தேவைப்படும் போது சுருட்டிக் கொள்ளவும் முடியும்.
சாம்சங் நிறுவனம் போலவே எல்ஜி நிறுவனமும் வளையும் தன்மை கொண்ட டிவியை உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதே போல அடுத்த வருடம் வளையும் டிஸ்ப்ளேவைக் கொண்ட ஸ்மார்ட்போன்களும் வெளியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது
0 comments:
Post a Comment