பாடநூல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் அவற்றைப் பயன்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் களையப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்குப் பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித சுணக்கமும் இல்லாமல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அச்சிடப்பட்ட பாடநூல்கள் தவிர, மாணவர்கள் அவர்களின் வசதிக்கேற்ப பாடநூல்களைப் படிப்பதற்கு ஏதுவாக அவை www.tnscert.org என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாடநூலைப் பயன்படுத்துவதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் களையப்பட்டுள்ளன
0 comments:
Post a Comment