சுவிட்சுகளை எல்லாம் தேடாமல், சொன்னாலே செயல்படும், ‘வை – பை’ பல்பு மற்றும் விளக்குகளை அறிமுகப்படுத்தி உள்ளது, சீனாவின் ‘சயோமி’ நிறுவனம்.
வாய் மொழி உத்தரவில் செயல்படக்கூடிய நான்கு வகையான, ‘ஸ்மார்ட் யீலைட்’ தயாரிப்புகள் உள்ளன.‘இந்த ஸ்மார்ட் பல்புகளை, ‘கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்சா’ போன்ற மொபைல் போன், ‘ஆப்’கள் மூலம், குரல் உத்தரவில் இயக்கலாம்; பிரகாசத்தைக் கூட்டலாம்; குறைக்கலாம். இந்த யீலைட் வகைகளை முன்கூட்டியே உத்தரவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தன்னிச்சையாக விளக்கை இயங்கச் செய்யவும், அணைக்கவும் முடியும்.
நான்கு வகையான தயாரிப்புகளில், ‘கேண்டலா லேம்ப்’ விளக்கு மெழுகுவர்த்தியை போன்று, ஒளிச் சிதறலை தத்ரூபமாக வெளிப்படுத்தி அசத்தும். இந்த ஸ்மார்ட் விளக்கு மற்றும் பல்புகள், அமேசான் வலைதளத்தில் 2,499 – 4,999 ரூபாய்க்கு கிடைக்கின்றன. முக்கிய நகரங்களில் உள்ள, மின் விளக்கு விற்பனையகங்களிலும் கிடைக்கும்
0 comments:
Post a Comment