Skip to content
தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,175 பணியிடம்:மார்ச் 7 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு
மின் வாரியத்தில், 2,175 ஊழியர் தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு மின் வாரியம், கணக்காளர்,
உதவியாளர் உட்பட, 2,175 புதிய ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது.
இதற்கு, 'மின் வாரிய இணையதளத்தில், மார்ச், 2 முதல் விண்ணப்பிக்கலாம்' என,
மின் வாரியம் ஏற்கனவே அறிவித்தது. ஆனால், திட்டமிட்டபடி, தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் வசதி துவங்காததால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், 'தேர்வுக்கு, மார்ச், 7 முதல், மின் வாரிய இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கலாம்; கட்டணம், கடைசி தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள், இணைய
தளத்தில் தெரிவிக்கப்படும்' என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Posts:
அரசு மேல்நிலைப் பள்ளியை தனது சொந்த நிதியில் மேம்படுத்திய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!அரக்கோணத்தை அடுத்த மோசூ&… Read More
66 இளநிலை உதவியாளர் & 111 கணினி இயக்குபவர் -அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் -2.11.2018
… Read More
தமிழகம்: அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, மடிப்பாக்கம், மதுரவாயல், நங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 18) செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா. அப்போது பேசிய அவர் "வெப்பசலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைபெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது. வரும் 20ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வரும். அப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கச் சாதகமான சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாகப் பெய்யும்.
வளிமண்டலத்தில் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 செ.மீ மழையும், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஆம்பூர், வேலூர், பெரியகுளம் பகுதியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.
n
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்ற… Read More
மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம்வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!தேவகோட்டையில் கடந்த சில … Read More
பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' இல்லை: தேர்வுக்கு தயார் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு*புதிதாக மாற்றியமைக்கப்&… Read More
0 comments:
Post a Comment