இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்

       தமிழக அரசின் இணைய சேவை மையங்களில், பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம். 
 
            ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் பயிலும் மாணவர்களுக்காக, பாட நூல்கள் இணைய வழியில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இணைய வழி மூலமாகப் பணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைத்திட அரசு பொது சேவை மையம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

         அவர்கள் இணைய சேவை மையத்திலேயே பாடநூல் நிறுவன இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அதற்குரிய பணத்தைச் செலுத்தலாம். கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. முன்பதிவு செய்வோரின் வீட்டு முகவரிக்கே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment