சிறப்பு பள்ளி பணியிடம் நிரப்புவதில் முறைகேடு
அரசு சிறப்பு பள்ளிகளில், விடுதி துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல
பணியிடங்களை முறைகேடாக நிரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில்
அரசு சிறப்பு காது கேளாதோர், பார்வை குறையுடையோர், கை, கால்
ஊனமுற்றோருக்கு என, 62 பள்ளிகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள, 125
பணியிடங்கள் நிரப்புவது குறித்து, வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் அழைப்பு
கடிதம் அனுப்பப்பட்டது.
அக்கடிதம் கிடைத்தோருக்கு, கடந்த ஒரு
வாரமாக, மாற்றுத் திறனாளி நலத்துறை இயக்குனரகத்தில், சான்றிதழ்
சரிபார்க்கும் பணி நடந்தது. ஆனால், சான்றிதழ் சார்பார்க்கும் பணியை
பெயருக்கு நடத்தி, முறைகேடாக, பணியிடங்களை நிரப்புவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
0 comments:
Post a Comment