கடினமான கணிதத் தேர்வுக்கு உரிய தீர்வு: சிபிஎஸ்இ


         பிளஸ் 2 கணிதத் தேர்வுக்கு உரிய தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
 
         சிபிஎஸ்இ சார்பில் கடந்த 14-இல் நடத்தப்பட்ட பிளஸ் 2 கணிதத் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், மாணவர்கள்கவலையில் ஆழ்ந்தனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் பலரும் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.


அப்போது, இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு பதிலளித்தார்.இந்த நிலையில், சிபிஎஸ்இ வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்வு கடினம் தொடர்பாக, மாணவர்கள், கணித ஆசிரியர்கள், தேர்வர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து சிபிஎஸ்இக்கு புகார்கள் வந்துள்ளன.இதுதொடர்பாக கணிதப் பாட நிபுணர்கள் குழு, முன்பாக வைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டு, தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி தொடங்குவதற்கு முன்பாகவே உரிய தீர்வு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment