வால்பாறை முடீஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்ததால்,
இரு மாணவர்கள் மட்டுமே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதுகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட வால்பாறையில்,
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, எட்டு தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
வால்பாறை அடுத்துள்ள முடீஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் இருவர், தற்போதுதேர்வெழுதுகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன், உதவி கண்காணிப்பாளர், இரு மேற்பார்வையாளர்கள் உட்பட நால்வர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, 'முடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்த, 2005ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.'வன விலங்குகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதியை ஒட்டி பள்ளி அமைந்துள்ளதாலும், போதிய பஸ்வசதி இல்லாததாலும், பள்ளியில், மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, முடீஸ் பஜார்பகுதிக்கு, பள்ளியை மாற்ற வேண்டும்' என்றனர்.

0 comments:
Post a Comment