ரியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய குத்துச்சண்டை வீரர் தகுதி பெற்றார்!


                ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய குத்துச்சண்டை தகுதிச்சுற்றில் இந்தியாவின் சிவ தாபா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதனால் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சீனாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் 56 கிலோ எடைப்பிரிவு அரையிறுதிச் சுற்றில் 3-0 என்கிற புள்ளிகள் கணக்கில் அவர் கஸகஸ்தானைச் சேர்ந்த கைராத்தைத் தோற்கடித்தார்.
இதனையடுத்து, ரியோவில் நடைபெற்ற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சிவ தாபா தகுதி பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் இவர்தான்.

0 comments:

Post a Comment