ஆசிரியர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு: ஆசிரியர் கூட்டணி கண்டனம்

        அரசு பள்ளிகளில் பணிசெய்யும் தலைமையாசிரியர்களை கல்வித்துறை அலுவலகப் பணியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

         அமைப்பின் மாநிலச் செயலர் சோ. முருகேசன், மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், தலைவர் பி. ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து அளித்த மனு: ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்ற முன்னுரிமைப் பட்டியல் இதுவரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஒப்புதல் பெற்ற பட்டியல் வழங்க வேண்டும்.


வள்ளியூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஜனவரி மாத குறை தீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும்.

நான்குனேரி ஒன்றியத்தில் பல்வேறு பள்ளி தலைமையாசிரியர்களை கல்வித்துறை அலுவலகப் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்துவதால், அவர்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நடைமுறையை கைவிட வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

மேலப்பாளையத்தில் உள்ள கஜானத்துல் உலூம் ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment