துணை ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவி
14/03/2016
புதுடில்லி : இந்தோ - திபெத் எல்லைப் படை உட்பட துணை ராணுவப்படையின் அனைத்து பிரிவுகளிலும், அதிகாரிகள் அந்தஸ்தில் பெண்களை சேர்ப்பதற்கான உத்தரவை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படை உட்பட, துணை ராணுவப்படையில், பெருமளவு ஆண்கள் மட்டுமே உள்ள நிலையில், இதில், பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய, மத்திய அரசு, நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, 'மத்திய ரிசர்வ் போலீஸ், மத்திய தொழிலக பாதுகாப்பு படைகளில், 33 சதவீதமும், எல்லை பாதுகாப்பு படை, சிறப்பு பணி பிரிவு, இந்தோ - திபெத் எல்லைப் படையில், 15 சதவீதமும், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்' என, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, துணை ராணுப்படையின் அனைத்து பிரிவுகளிலும் பெண்களை நேரடியாக, அதிகாரி அந்தஸ்தில் தேர்வு செய்வதற்கான உத்தரவை, உள்துறை அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.
வாய்ப்பு: இந்தோ - திபெத் எல்லைப் படையில், இதுவரை காவலர் பதவியில் மட்டுமே பெண்கள் உள்ளனர். இனிமேல், நேரடியாக அதிகாரி அந்தஸ்திலான பதவியில் பெண்கள் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment