கேரள மாநிலம், கொச்சியை
தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மாநில கப்பற்படை தலைமையகத்தில்
‘லேபரட்டரி டெமான்ஸ் டிரேட்டர்’ பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
மொத்த இடங்கள்: 26.
பணி: லேபரட்டரி டெமான்ஸ் டிரேட்டர்:
துறை: இயற்பியல் - 03
துறை: வேதியியல் - 07
துறை: எலக்ட்ரானிக்ஸ் - 16
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 19.03.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
விண்ணப்பிக்கும் முறை:
www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து, தெளிவாக
பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து
இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, உடல்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Flag Officer Commanding Officer,
{for SO (CRC)},
Headquarters, Southern Naval Command,
KOCHI- 682 004.
Kerela.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.03.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indiannavy.nic.in என்ற இணையதளத்தை பார்த்துக் கொள்ளவும்.
0 comments:
Post a Comment