எழுத படிக்க தெரியாத பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை கழகங்கள்.

    தமிழக பல்கலைகளில், தகுதியற்ற பட்டங்கள் வழங்கி, எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். 
            தகுதியற்றவர்கள், துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் ஆகின்றனர்.
இதற்கு, ஊழல் மலிந்த உயர்கல்வித்துறையே காரணம். பல்கலைகளும், கல்லுாரிகளும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளின் படியே செயல்பட்டு, பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக, யு.ஜி.சி., விதிகளை துச்சம் என துாக்கி வீசி விட்டு, பல்கலைகளும், கல்லுாரிகளும் செயல்படுகின்றன. பேராசிரியரில் துவங்கி, துணைவேந்தர் நியமனம் வரை, தகுதியற்றவர்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியராக, 10 ஆண்டு அனுபவம் பெற்றவரையே, துணைவேந்தராக்க வேண்டும். ஆனால், இணை பேராசிரியரும், அனுபவம் இல்லாத பேராசிரியர் பலரும் துணைவேந்தராகி உள்ளனர். இதற்கு அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுமே காரணம். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரிய மான, டி.ஆர்.பி., மூலம், 1,000 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில், உச்ச நீதிமன்ற உத்தரவையே மத

Related Posts:

0 comments:

Post a Comment