06/04/2016
பொது பிரிவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில், 360 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலைமருத்துவப் படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், நேற்று துவங்கியது. அழைக்கப்பட்ட, 575 பேரில், 453 பேர் பங்கேற்றனர்.
அரசு மருத்துவ கல்லுாரிகளில், 311 பேர்; சுய நிதி கல்லுாரிகளில், 49 பேர் என, 360 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன; மீதம், 480 இடங்கள் உள்ளன; ஏப்., 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
0 comments:
Post a Comment