17/04/2016
பள்ளி வாகனங்களில் ஆய்வுப் பணிகளை மே மாதத்திற்குள் முடிக்க, போக்குவரத்து ஆணையர் சத்தியபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.
வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
உத்தரவு:தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களை அழைத்து செல்வதற்காக,
37 ஆயிரத்து 107 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் பாதுகாப்பை
மேம்படுத்துவதற்காகவும், குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும்
ஆண்டுதோறும் வாகன ஆய்வு
நடத்தப்படுகிறது.அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில்
அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் சென்று மே மாதத்திற்குள் ஆய்வு நடத்த வேண்டும்
என, போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், குறைபாடுகள்
இருந்தால் தகுதிச் சான்று (பெர்மிட்) வழங்க கூடாது. அந்த வாகனத்தின்
பெர்மிட் சஸ்பெண்ட் செய்ய வேண்டும், என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment