எம்.பார்ம். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்:

17/04/2016

எம்.பார்ம். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட எம்.பார்ம் படிப்புக்கு அரசு, சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய மே 1 கடைசித் தேதியாகும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கு மே 2 கடைசியாகும். இதற்கான நுழைவுத் தேர்வு மே 8-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வுக்கு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment