04/04/2016
லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் இரண்டு ஆண்டு
காலத்தில் குவித்த சொத்து விவரங்கள் அனைத்தையும் ஏப். 15-ம் தேதிக்குள்
தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசில் 50லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். இவர்கள்
ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட விதிமுறை கீழ் வர உள்ளனர்.இதையடுத்து புதிய
விதிமுறைகளின் கீழ் சொத்துவிவரங்கள் வெளியிடும் அறிவிப்பை மத்திய அரசு
வெளியிட்டது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை, அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
மத்திய அரசின் அமைச்சக செயலர்கள் ,உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்கள்
கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வாங்கி குவித்த அசையும், அசையா
சொத்து விவரங்கள், பங்கு முதலீடுகள், ரொக்க கையிருப்புகள், வங்கி
பரிவர்த்தனை, இன்சூரன்ஸ் பாலிசி விவரங்கள் மற்றும், குடும்ப உறுப்பினர்கள்
வாங்கிய சொத்துக்கள் ஆகிய விவரங்களை வரும் ஏப். 15-ம் தேதிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும். இரண்டாவது முறையாக ஜுலை 31ம் தேதிக்குள் மீண்டும்
விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment