09/04/2016
திருவண்ணாமலை
மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10–ம்
வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது.
அங்கு தேர்வு எழுதிய மாணவி
சுபாஷினி தேர்வு முடிந்ததும் தனது தந்தை பழனியுடன் பள்ளி வளாகம் முன்பு
தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேவிகாபுரம் அரசு பள்ளியில் எனது மகள்
சுபாஷினி 10–ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். கடந்த 4–ந் தேதி அவர் கணித
தேர்வு எழுதினார். தேர்வு நடந்து கொண்டிருந்தபோது பறக்கும் படை அலுவலர்
என்று கூறி உள்ளே ஒரு நபர் வந்துள்ளார்.
அவர் அங்கு தேர்வு எழுதிக்கொண்டு இருந்த
தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கு பதில்கள் அடங்கிய துண்டு சீட்டு
கொடுத்தார். இதை எனது மகள் பார்த்துவிட்டார். அந்த நபர் மூலம் எனது
மகளுக்கு தேர்வு அறையில் தொந்தரவு கொடுக்கப்பட்டது.
இதனால் அவளால் கணித தேர்வை சரியாக எழுத
முடியவில்லை. தேர்வில் அவள் 100 மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பும்
கைநழுவியது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா வளர்மதியிடமும், கல்வி
அதிகாரியிடமும் புகார் கூறினோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு பழனி கூறினார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து
பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வித்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சுபாஷினியும், பழனியும்
போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்
துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர்
சங்க தலைவர் மண்ணு ஆகியோரும் அங்கு சென்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர் சிவஞானம் அங்கு வந்து
மாணவியிடம் தேர்வு அறையில் நடந்தவை குறித்து விசாரணை நடத்தினார். பின்னர்
சிவஞானம் கூறிய தாவது:–
தேர்வு அறையில் வேறு மாணவியிடம் துண்டு
சீட்டு கொடுக்கப்பட்டது குறித்து மாணவி சுபாஷினியிடம் விசாரித்துள்ளேன்.
மாணவி சுபாஷினியின் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும். பறக்கும்படை
அதிகாரி போல் தேர்வு அறையில் நுழைந்தது யார் என்று தெரியவில்லை. அது
குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இது சம்பந்தமாக தேர்வு அறை
கண்காணிப்பாளரிடமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சிவஞானம் கூறினார்.
0 comments:
Post a Comment