20 சதவீதம் இடைக்கால நிதிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


          திண்டுக்கல்;'ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறை படுத்தும் வரை இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மோசஸ் தெரிவித்தார்.

           திண்டுக்கல்லில் இச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்திலும் வழங்க அரசு முயற்சி எடுத்துள்ளது.அதற்காக நியமிக்கப்பட்டக்குழு பணியை துவங்குவதற்கு முன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும். இல்லாவிடில் டிச.,28ல் சென்னையில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

Related Posts:

0 comments:

Post a Comment