🌙🌙🌙இன்று மூன்றாம் பிறை ... 3ஆம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசையாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை என நாம் குறிப்பிடுகிறோம். அமாவாசை அன்று நிலவு தெரியாது, மறுநாள் கூட நிலவு தெரியாது.
மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த 3 ஆம் பிறையைத் தான் சிவன் தன் தலைமூடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
3 ஆம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
0 comments:
Post a Comment