சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த

காற்றழுத்தம், வீசும் காற்று ஆகியவற்றின் அடிப்படையில் வடகிழக்குப் பருவமழை தொடக்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வரும் நவம்பர் ஒன்றாம் தேதியை ஒட்டி பருவமழை தொடங்கும். இதன்மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்தின் தென் கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உட்பகுதி, கேரளா ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் பரவலான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் தலைமை அதிகாரி மகேஷ் பலாவாட் கூறுகையில், அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும்.

இது நவம்பர் 2 அல்லது 3ஆம் தேதி வரை தொடரும். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவும். தீபாவளி நாளில் மழைப்பொழிவிற்கு பெரிதாக வாய்ப்பில்லை. இதையடுத்து நவம்பர் 5 முதல் 7 வரை கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 நேரத்திற்கு சில இடங்களில் லேசான மழை பொழியும். அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 25 டிகிரியும் வெப்பநிலை நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Posts:

0 comments:

Post a Comment