தொடர் காய்ச்சலால் விடுமுறை எடுக்கும் மாணவர்களின் விவரங்களை வழங்க உத்தரவு


சென்னையில், காய்ச்சலால் விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்த பட்டியலை சேகரித்து, அவர்கள் வசிக்கும் பகுதிகளில், சுகாதார பணிகளில், மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

சென்னை மாநகராட்சியில், 30க்கும் மேற்பட்டோர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல், பன்றி காய்ச்சலுக்கு, 10க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாநிலத்திலேயே, டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில், சென்னை முன்னிலை வகிக்கிறது.இதனால், டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிகளில், மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, அனைத்து துறை பணியாளர்களும், கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காய்ச்சலால், விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்த பட்டியலை சேகரிக்கும் பணிகளில், மாநகராட்சி பொது சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி பொது சுகாதார அதிகாரி கூறியாதவது:காய்ச்சல் ஏற்பட்டவுடன், தொடர்ந்து, ஏழு நாட்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

காய்ச்சல் ஏற்பட்ட மாணவர்களுக்கு, விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன் வாயிலாக, அவர்கள் வசிக்கும் பகுதிகளில், சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும்

Related Posts:

0 comments:

Post a Comment